நம் இந்திய சரித்திரத்தில் இரு வேறு பக்கங்களை எதிர்கொண்ட புராணங்கள்: இராமாயணம் மற்றும் மகாபாரதம். இராமாயணம் கடல் கடந்து நடந்த மாபெரும் போராட்டம். இப்புராணமோ ஒரு முழு நிறைவான சிறந்த கொள்கை உடைய மனிதனின் தன்மையை எடுத்துக்காட்டும். மற்றொரு புராணமான மகாபாரதம் நியா தர்மங்களை புகட்டும். இந்த இரு புராணங்களுக்கும் ஒரு ஒற்றுமை என்றால் அது இராமர் மற்றும் கிருஷ்ணர்(விஷ்ணுவின் அவதாரங்கள்) தெய்விகதன்மையை உணர்த்தும் செயல்பாடுகள்.
இப்பதிப்பின் முலம் ஒரு மறக்கப்பட்ட, சில வாசகங்களில் மட்டும் தோன்றும் வீரச் சரிதிரத்தை உங்களுக்காக வழங்குகிறேன். பதினெட்டு நாட்கள் நடந்த குருஷேக்திர போரில், பாண்டவர்கள் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. கால போக்கில் பாண்டவர்கள் எவ்வாறு வெற்றி பெற்றனர் என்பது மண்ணோடு மண்ணாகி விட்டது. பாண்டவர்களுடன் கிருஷ்ணர் இருந்ததே வெற்றியின் காரணமாக சில புராணத்தில் கூறபடுகிறது. ஆனால் கிருஷ்ணரோ தேவகியின் மகன்தான். அவர் கடவுளாக எங்கும் தோன்றவில்லை. இந்நிலையில் வெற்றி பெற்றதுக்கு பெரிதும் உதவியாக இருந்தது ஒரு உயிரின் முடிவு. அவன்தான் அரவான்.
அரவான் என்றால் முப்பற்றிரண்டு பல்வேறு பண்புகளுடைய துணிவான இளைஞன். அந்த இளைஞனின் கசபேறிய ஏகாந்தம் இது. அம்பெரிதலில் திறமை வாய்ந்த அர்ஜுனனின் மகன்தான் அரவான். அர்ஜுனன்க்கு அரவான் என்று ஒரு மகன் இருந்தது ஆச்சிரியம் என்றால், அரவானின் தாயார் மற்றொரு அதிர்ச்சி. அர்ஜுனன் மீது காதல் கொண்ட நாக வம்சத்தின் ராஜகுமாரியான உலுப்பி என்றே நாக பெண்மனியே அரவானின் தாயார். சில வருடங்களில் குருஷேக்திர போர் ஆரம்பிக்கவிருந்தது.
இச்சமையத்தில் நாம் அறிந்து கொல்ல வேண்டிய ஒரு விவரம் உள்ளது. ‘களபலி’. முன்பு அரசர் ஆட்சியில் போருக்கு தயாராகும் விதமாக, போர்களத்திற்கு பலி குடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. இதில் பலியாகும் உயிர் மோச்சமடையும் என்றும் ஒரு நம்பிக்கை தொண்டு தொட்டு வருகிறது.
போருக்கு சில நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், பாண்டவர்களில் ஒருவரும் கைதேர்ந்த சோதிடருமான, சகாதேவனிடமிருந்து களபலி, மறு நாளான அம்மாவாசை அன்று, குடுபதற்ககான உகர்ந்த சமயம் என்பதினை அறிந்து கொள்கிறான்.
எனவே, அரவானை பலியாளாக சம்பந்தம் கோரினான். அரவான் ஒப்புகொண்டான். இதை அறிந்த கிருஷ்ணர், அரவானை கௌரவர்களுக்கு இல்லாமல் பாண்டவர்களுக்காக பலி குடுப்பதே மேல் என்று உணர்ந்து, திடம் தீட்டி சம்பதிக்க வைத்தார். யுதிச்டரிடம் இதனை சுட்டிகாட்டி, காலிக்கு ஆயுதபூஜை அன்று அரவானை பலி குடுகும்படி எடுத்துரைத்தார்.
அனால் பெருந்தேவனார் எழுதிய மகாபாரதத் தமிழ் பதிப்பான பாரத வெண்பாவில் கௌரவர்கள் அம்மாவாசை அன்று ஒரு வெள்ளை யானையை பலி குடுத்தனர் என்கிறது. இதனை எப்படி ஈடு செய்வதென்று தெரியாமல் இருந்தனர் பாண்டவர்கள். அப்போது கிருஷ்ணர், இரு உயிரினகளின் பிறப்பான அரவானை பலி குடுக்கும்படி யோசனை கூறுகிறார்.
அரவானின் மரணமும் பல்வேறு வடிவங்களில் சொல்லபடுகிறது. ஒவ்வொன்றாக காணலாம்.

பதிப்பு ஒன்று: அரவான் கிருஷ்ணரிடம் தான் போர்க்களத்தில் ஒரு சிறந்த வீரனால் வீர மரணம் அடைய வேண்டும் என்ற வரத்தை வேண்டியதாக கூறப்படுகிறது. அவ்வாறே அரக்கன் அலம்பூசன் அரவானை கொல்கிறான்.
பதிப்பு இரண்டு: தான் பதினெட்டு நாள் நீடிக்கும் போரினை காண வேண்டும் என்பது அரவானின் ஆசை. எனவே அரவானின் தலை கொய்யப்பட்டு போர்களத்தில் வைக்கபடுகிறது.
பதிப்பு மூன்று: தான் பலியாக போகிறோம் என்று அறிந்த அரவான், தான் இறக்கும் முன்பாக திருமணம் செய்து கொல்ல வேண்டும் என்று ஆசை படுகிறான். இந்த ஆசையை நிறைவேற்ற கிருஷ்ணர் மோகினி என்ற பெண்ணாக அவதரிக்கிறார்.
இப்போது அரவான் என்பவர் யாரென்று அறிந்து கொல்லும் சமயம். இவர் நம் எல்லோருக்கும் அறிந்தவரே. கிருஷ்ணரின் உத்தரவின்படி அரவான் தலை வெட்டப்பட்டு கரபரிகா என்ற ஆற்றில் எறியப்பட்டது. அதில் குழைந்த வடிவம் பெற்று காரபாலனாக சந்திரகிரி நகரின் அரசனால் வழக்கபட்டார். பின்னர் அரக்கன் கூத்தசூரனயை கொன்றதன் மூலம் கூவகம் எனும் ஊரில் கூத்தாண்டவராக காட்சி அளிக்கிறார்.
இவ்வாறு ஒரு கதையை படமாகியமைக்கு இயக்குனர் வசந்த பாலன் மற்றும் கதையாசிரியர் ச.வெங்கடேசனுக்கும் நன்றி!!!
English – version: Journey of Valor